News

“டீசல் ஏப்ரல் 12 வரை மாத்திரமே உள்ளது.. பெட்ரோல் ஏப்ரல் 23 வரை மாத்திரமே உள்ளது..” – அமைச்சர்

எரிபொருள் இருப்புத் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு

நாட்டின் சாதாரண நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி குறித்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்தார்.

நாட்டின் தற்போதைய எரிசக்தி நிலைமையை விளக்கிய அமைச்சர், தற்போதுள்ள கையிருப்பின் அடிப்படையில் ஒவ்வொரு வகை எரிபொருளையும் பயன்படுத்தக்கூடிய கால எல்லைகளை பின்வருமாறு குறிப்பிட்டார்:

• 92 ஒக்டேன் பெட்ரோல்: ஏப்ரல் 23 ஆம் திகதி வரை

• 95 ஒக்டேன் பெட்ரோல்: மே 10 ஆம் திகதி வரை

• ஒட்டோ டீசல்: ஏப்ரல் 12 ஆம் திகதி வரை

• சூப்பர் டீசல்: மே 10 ஆம் திகதி வரை

எதிர்காலத் தேவைகளுக்கான முன்பதிவுகள் மற்றும் விநியோக வலையமைப்பை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இங்கு மேலும் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button