தரம் குறைந்த நிலக்கரியால் குறைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 850,000 லீற்றர் டீசல் மேலதிகமாக தேவை !!

மின்சார உற்பத்தி நஷ்டம் மற்றும் முறையற்ற நிலக்கரி பயன்பாடு குறித்து பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை மின்சார விநியோகத்திற்காக மின்சார சபை 850,000 லீற்றர் டீசலை செலவிட வேண்டியிருந்ததாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்தியுள்ளார்.
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு தரம் குறைந்த நிலக்கரியைப் பயன்படுத்தியதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார். இதன் காரணமாக கடந்த சனிக்கிழமை 135 மெகாவாட் மின்சாரம் கட்டமைப்புக்கு கிடைக்காமல் போயுள்ளது.
இந்த முறையற்ற செயல்பாட்டினால் 19 கோடி ரூபா பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் முன்வைக்கும் அனைத்து விடயங்களும் அறிவியல் அடிப்படையிலும் துல்லியமான தரவுகளின் அடிப்படையிலுமே அமைந்திருப்பதாக வலியுறுத்திய ரணவக்க அவர்கள், முன்வைக்கப்படும் வாதங்களுக்கு தரவுகள் மூலம் பதிலளிக்காமல், கருத்துக்களைக் கூறுபவர்களை இலக்கு வைத்து சேறு பூசும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அரசாங்கத்திற்குத் தெரிவித்தார்.



