News
“மின்வெட்டு ஏற்படக்கூடும்.. – அமைச்சர்”

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரையில் மின்வெட்டு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்ற போதிலும், எதிர்காலத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அவர்கள் இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்:
“இதுவரை ஒரு மணித்தியாலமேனும் மின்சாரத்தை துண்டிக்காமல் நாம் கொண்டு செல்கிறோம். ஆனால், மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய ஒரு காலமும் வரக்கூடும்”
இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கம் அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அங்கு வலியுறுத்தினார்.



