News

வளைகுடா யுத்தம் நடைபெறுவதாலேயே தாம் வரிசையில் நிற்பதாக கூறும் ஒரு எருமைக்கூட்டம் நாட்டில் உள்ளது.

வலைகுடா யுத்தம் நடைபெறுவதாலே தாம் வரிசையில் நிற்பதாக கூறும் ஒரு எருமைக்கூட்டம் நாட்டில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

தாங்கள் அளித்த வாக்குகளை நியாயப்படுத்த வலைகுடா யுத்தம் நடைபெறுவதாலே தாம் வரிசையில் நிற்பதாக கூறும் ஒரு எருமைக்கூட்டம் நாட்டில் உள்ளது.

ஒருவர் கூறும் பொய்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பும் பகுத்தறுவு இல்லாத ஒரு கூட்டம் இருக்கும் வரை நாடு ஒருநாளும் முன்னேற்றம் அடையாது.

முன்னதாக அனுர குமார திஸாநாயக ஒரு மாதத்திற்கு எரிபொருள் இருப்பதாக கூறினார்.எரிபெருள் கப்பல்கள் வரிசையில் வரவுள்ளதாக கூறினார்.தற்போது சில எரிபெருள் கப்பல்கள் வராது என்கிறார்.

எரிபொருள் இருக்குமானால் , கிவ் ஆர் முறைமையில் மட்டுப்பட்டுத்தி எரிபொருள் விநியோகிக்கப்படுமாக இருந்தால் ஏன் மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்.நாம் கிவ் ஆர் முறைமையில் எரிபொருள் வழங்க ஆரம்பித்த பின்னர் வரிசைகள் இல்லாமல் சென்றது. ஆனால் இன்று வரிசைகள்

அதிகரித்து செல்கின்றன.

மக்களை ஏமாற்றுவதில் வல்லர் தான் தபுந்தேகமக தனி சிக்னல் சந்தியில் கொழும்பு நோக்கி நின்றிருந்த தபுந்தேகமக “ஹாதயா” என குறிப்பிட்டார்.

பிரிக்ஸ் மாநாட்டுக்கு ரனில் விக்ரமசின்க செல்ல திட்டமிட்டுருந்தார். ஆனால் விஜித ஹேரத் செல்லவில்லை.பிரிக்ஸ் மாநாட்டுக்கு சென்றிருந்தால் இன்று டொலரில் மாத்திரம் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிலை ஏற்பட்டிருக்காது.இவைதான் தான் பருப்பு.“ வேலை தெரியாதவர்களை ஆட்சியில் அமர்த்தியதால் கேட்டு திண்ட பருப்பு “ என குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button