News

அமெரிக்க-இஸ்ரேல்- ஈரான் இடையே இடம்பெறுவது யுத்தம் அல்ல அது அப்பட்டமான ஆக்கிரமிப்பு ..

அமெரிக்க-இஸ்ரேல்- ஈரான் இடையே இடம்பெறுவது யுத்தம் அல்ல அது அப்பட்டமான ஆக்கிரமிப்பு ..என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் குறிப்பிட்டார்.

அவரது உத்தியோகபூர்வ முகநூல் பதிவொன்றில்

அமெரிக்க, இஸ்ரேல், ஈரான் இடையே இடம்பெறுவது யுத்தம் அல்ல அது அப்பட்டமான ஆக்கிரமிப்பாகும் என்பதை ஜனாதிபதி Anura Kumara Dissanayake புரிந்துகொள்ளவேண்டும்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அமெரிக்கா ஈரானின் ஆட்சியை அப்புறப்படுத்த யுத்தம் செய்வதாக குறிப்பிட்டார்.ஒரு நாட்டின் இறையான்மைக்கு எதிராக வேறு ஒரு நாடு தலையீடு செய்வது ஆக்கிரமிப்பு என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும் ஈரான் கப்பல் நாட்டிற்குள் நல்லிணக்க விஜயம் (Good will Visit) ஒன்றை மேற்கொள்ள அனுமதி கேட்டதாக கூறும் ஜனாதிபதி அமெரிக்க போர் விமாத்தை மத்தளையில் தரையிரக்க அனுமதி கோரியதாகவும் குறிப்பிட்டார், யுத்தத்திற்கு நாட்டை பயன்படுத்த அனுமதி கேட்பதும் நல்லிணக்க விஜயத்திற்கு அனுமதி கேட்பதையும் ஒப்பிட்டு பேசுவது வேடிக்கையான விடயமாகும்.

மேலும் அன்று ஈரான் கப்பல் அனுமதி கேட்ட சர்ச்சை தொடர்பில் பேசிய ஜனாதிபதி அமெரிக்க போர் விமானம் அதே தினத்தில் அனுமதி கேட்டதை கூறாமல் இன்று திடீரெனெ அதை கூறுவதன் மர்மம் என்ன ?

ஆக்கிரமிப்பிற்குள்ளான ஈரானுக்கு ஆறுதல் கூறுவதை தவிர்த்து வரும் ஜனாதிபதி கட்டார் மற்றும் ஐக்கிய அமீரகத்திற்கு ஆறுதல் கூறியுள்ளமை இந்த விடயத்தில் அவர் நடுநிலைமை அல்ல இரட்டை வேடத்தையே காட்டி நிற்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் Mujibur Rahman கூறியது போல ஜனாதிபதியின் இரட்டை வேடத்தை புரிந்துகொண்டே அவரது உத்தியோகபூர்வ இப்தார் அழைப்பிதழை ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளும் புறக்கணித்துள்ளன.

பேசுவது நடுநிலைமை எனக்கூறிக்கொண்டு யுத்த சூழலில் அமெரிக்க ராஜதந்திரிகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து பேசும் ஜனாதிபதி ஈரானிய தூதுவரையாவது அழைத்து பேசினாரா? என நாம் கேட்கிறோம்.

ஜனாதிபதி அனுர குமாரவுக்கு ஒரு படி மேலே சென்று முஸ்லிம் பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈரானின் பெயரைக்கூட கூற மறுப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.

இலங்கைக்கான ஈரான் தூதுவர் கூறியது போல அத்துமீரல்களுக்கு எதிராக குரல் கொடுக்கமல் இருப்பது நடுநிலைமை அல்ல என்பதை ஜனாதிபதிக்கு நாம் நினைவு படுத்த விரும்புகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button