News

ஆசிய அபிவிருத்தி வங்கியில் 620 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அமைச்சரவை அங்கீகாரம் !

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்திற்கு இணையாக, இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக கொள்கை அடிப்படையிலான கடன்களை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதன்படி, பின்வரும் 05 உப திட்டங்களின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 620 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்காக, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது:

• வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித் திட்டம் – 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

• நுண்ணிய, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு வலுவான மற்றும் உள்ளடக்கிய நிதிச் சூழலை உருவாக்கும் திட்டம் – 220 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

• நீர் வழங்கல் மற்றும் சுகாதார மறுசீரமைப்புத் திட்டம் – 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

• தாங்குதிறன் வளர்ச்சி மற்றும் உள்ளடக்கிய மீட்சிக்கான வாய்ப்புகளை வழங்கும் அபிவிருத்தித் திட்டம் – 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

• கிருஷிவிற்பனைப் பெறுமதித் தொடர் நிதி மற்றும் வர்த்தகமயமாக்கல் துறை அபிவிருத்தித் திட்டம் – 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

Recent Articles

Back to top button