News
தரமற்ற நிலக்கரியால் இழக்கப்படும் ஒரு நாள் மின் உற்பத்தியை ஈடு செய்ய நாடு முழுவதும் 1 கோடி 80 லட்சம் மின் விளக்குகளை நாள் முழுவதும் அணைக்க வேண்டும்.

தரமற்ற நிலக்கரியால் இழக்கப்படும் ஒரு நாள் மின் உற்பத்தியை ஈடு செய்ய நாடு முழுவதும் 1 கோடி 80 லட்சம் மின் விளக்குகளை நாள் முழுவதும் அணைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
இன்று 6-10 மணிவரை மின் விளக்கு ஒன்றை அணைக்குமாறு அமைச்சர்கள் கூறுகிறார்கள். ஆனால் தரமற்ற நிலக்கரியால் இழக்கப்படும் மின் உற்பத்தியை ஈடு செய்ய நாடு முழுவதும் 1 கோடி 80 லட்சம் மின் விளக்குகளை நாள் முழுவது அணைக்க வேண்டும் அதாவது ஒரு வீட்டில் மூன்று மின் விளக்குகளை அணைக்க வேண்டும். நாட்டில் 6 மில்லியன் மின் பாவனையாளர்கள் உள்ளனர்.
அனைத்து மின் பாவனையாளர்களும் 3 மின் விளக்குகளை மூலம் அணைத்தால் மட்டுமே தரமற்ற நிலக்கரியால் இழக்கப்படும் 150 மெகாவொட் மின் இழப்பை ஈடு செய்யலாம் என அவர் கூறினார்.



