News

அமைச்சர் குமார ஜயகொடிக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்.. இரு பிணைகளில் விடுவிப்பு..

மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (27) குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.

விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதியான அமைச்சரை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.

குமார ஜயகொடி இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் உயர் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரச டெண்டர் நடைமுறைகளை மீறி, தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சட்டவிரோதமான முறையில் இலாபம் அல்லது சலுகைகளைப் பெற்றுக்கொடுத்ததன் மூலம், இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ‘ஊழல்’ எனும் குற்றத்தைச் புரிந்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button