News
மாலிமா ஆட்சியில் NPP உறுப்பினர்கள் தவிர்ந்த அனைத்து குடிமக்களுக்கும் “ சட்டம் அனைவருக்கும் சமம் “

தேசிய மக்கள் சக்தியினர் சட்டத்திற்கு மேலால் உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்கு பதிவு செய்த விதம் குறித்து விமர்சித்த அவர் ,
தேசிய மக்கள் சக்தி அரசில் சட்டம் அனைவருக்கும் சமம் என்றார்கள்.ஆனால் இன்று குமார ஜயக்கொடிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட போது அவர் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து பிணையில் சென்றுள்ளார். இதே எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்தால் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அவர்களை அழைத்து வாக்குமூலம் பெற்று விளக்கமறியலில் வைத்து ஊடக கண்காட்சி நடத்தியிருப்பார்கள்.
இதுவா மாலிமா ஆட்சியில் சட்டம் அனைவருக்கும் சமம் என அவர் கேள்வி எழுப்பினார்.



