தரமற்ற நிலக்கரியினால் மின்சாரக் கட்டணத்திற்கு 2500 கோடி ரூபாய் சுமை !

தரமற்ற நிலக்கரியினால் மக்களின் மின்சாரக் கட்டணத்தில் 2500 கோடி ரூபாய் சுமை ஏற்றப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க (பெரமுன) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
“இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது தரமற்ற நிலக்கரி என்று சர்வதேச நாணய நிதியமும் (IMF) கூறுகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பிருந்த ஆளுங்கட்சி உறுப்பினர்களின் உரைகளைப் பாருங்கள். தரமற்ற நிலக்கரி இலங்கைக்கு வரவில்லை என்றே ஒவ்வொரு உரையும் அமைந்திருந்தது. இந்த மோசடியின் ஊடாக நீங்கள் இலங்கை மக்களுக்கு பத்தாயிரம் கோடி ரூபாயை நட்டப்படுத்தியுள்ளீர்கள். இந்த ஊழலுக்கு ஜனாதிபதி உட்பட அமைச்சரவை உதவி செய்துள்ளது. கடந்த நாட்களில் மின்வெட்டு நிலவியது. ஆனால், அவ்வாறு மின்வெட்டு இடம்பெறவில்லை என இப்போது அமைச்சர் கூறுகிறார். நிலக்கரியினால் ஏற்படும் நட்டத்தை மக்கள் மீது சுமத்தப்போவதில்லை என்று ஜனாதிபதி கூறியிருந்தார்” எனவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.



