குமார ஜயகொடி குற்றமிழைக்கவில்லை என்றால் ஏன் பதவி விலக வேண்டும் ?

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி எவ்வித ஊழலிலும் ஈடுபடவில்லை என்றால் ஏன் பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
குமார ஜயகொடியின் ராஜினாமா தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
ஓட்டு மொத்த அரசும் குமார ஜயகொடி குற்றமிழைக்கவில்லை அவர் பதவி விலக தேவையில்லை என நேற்றுவரை கூறிக்கூறிக்கொண்டிருந்த நிலையில் திடீரெனெ அவர் பதவி விலகியமையின் உள்நோக்கம் என்ன ? கடந்த வாரம் நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு குரல் பதிவு ஒன்றை கையளித்தோம். அதில் ஜனாதிபதியின் பெயரும் உரசியுள்ளது. ஜனாதிபதியின் பக்கம் இந்த ஊழல் திரும்புவதை திசை திருப்பவா ஜயகொடி பலி கொடுக்கப்பட்டுள்ளார் என்ற கேள்வி எழுகிறது.
ஜயகொடி குற்றமிழைக்கவில்லை என்றால் , ஜனாதிபதி ஆணைக்குழுவின் சுயாதீன விசாரணை நடைபெறும் என்றால் ஏன் இந்த ராஜினாமா ? என அவர் கேள்வி எழுப்பினார்.
ஜயகொடியை பாதுகாக்கும் அரசு ஆட்சியில் இருந்துகொண்டு அவர் மட்டும் பதவியை ராஜினாமா செய்வது மக்களை ஏமாற்றும் நடவடிக்கை என முஜிபுர் ரஹ்மான் சாடியுள்ளார்.



