News
டொலர் 320 ஐ தாண்டியது !

இலங்கை மத்திய வங்கி இன்று (ஏப்ரல் 20) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டாலரின் விற்பனை விலை 320 ரூபாயைத் தாண்டியுள்ளது.
இன்றைய தரவுகளின்படி, அமெரிக்க டாலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 312.83 ஆகவும், விற்பனை விலை ரூ. 320.27 ஆகவும் பதிவாகியுள்ளது
பிரிட்டிஷ் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை ரூ. 433.87 எனும் உயர் மட்டத்தில் காணப்படுவதுடன், யூரோ ஒன்றின் விற்பனை விலை ரூ. 378.21 ஆகவும், கொள்வனவு விலை ரூ. 366.61 ஆகவும் காணப்படுகிறது.


