News

உயிரிழந்த சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த 19,300 ரூபாய் பணத்தை எடுக்க, அவரின் எலும்புக் கூட்டை தூக்கிக் கொண்டு வந்த சகோதரர்

இந்தியா – டயனாலி கிராமத்தைச் சேர்ந்தவர. ஜிது முண்டா என்பவர் இவருடைய சகோதரி கக்ரா முண்டா, மல்லிபாசியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கியில் கணக்கு வைத்திருந்தார்.

அவரது சகோதரி இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதற்கு முன்னதாகவே அவரது கணவரும் ஒரே குழந்தையும் இறந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது ஒரே உறவினராக எஞ்சியிருப்பவர் ஜிது முண்டா மட்டுமே.

தனது சகோதரியின் கணக்கில் மீதமுள்ள 19,300 ரூபாய் நிலுவைத் தொகையைப் பெறுவதற்காக ஜிது வங்கிக்குச் சென்றபோது, வங்கி மேலாளர் அதனை வழங்க மறுத்துவிட்டார்.

அதற்கு கணக்கு வைத்திருப்பவர் நேரில் வர வேண்டும் அல்லது சட்டப்பூர்வ வாரிசு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று மேலாளர் கூறியுள்ளார்.

சரியான கல்வி அறிவு இல்லாத ஜிதுவிடம் இறப்புச் சான்றிதழோ அல்லது வாரிசு ஆவணங்களோ இல்லாததாலும், சிக்கலான நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடியாததாலும் அவர் உதவியற்ற நிலையில் திரும்பிச் சென்றார்.

எவ்வாறாயினும், அவர் நேற்று மயானத்திற்குச் சென்று புதைக்கப்பட்ட தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்து, அதனைத் தோளில் சுமந்தபடி 3 கிலோமீட்டர் தூரம் நடந்து வங்கிக்கு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்ததையடுத்து அவர்கள் அங்கு வந்துள்ளனர்.

அச்சமயம் ஜிது பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன், இந்த விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் கையாளுவதாகவும் வங்கியிடம் இருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button