ஹோட்டல் அறைகளில் குளித்துக் கொண்டிருந்த பெண்களை மொபைல் தொலைபேசிகள் மூலம் படம்பிடித்த 19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்கள்

நாரஹேன்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்களை இரகசியமாகப் படம்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து மாநாட்டில் கலந்து கொண்ட பல பெண் வைத்தியர்கள், தமது அறைகளில் குளித்துக் கொண்டிருந்த போது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் படம்பிடிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே இடத்தில் ஆண்களை உள்ளடக்கிய காட்சிகளையும் இவர்கள் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த காணொளிகள் ஏதேனும் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணையாளர்கள் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சந்தேகநபர்கள் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தலா 5 இலட்சம் ரூபா தனிப்பட்ட பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



