மிக விரைவில் வேறு ஒரு அரசாங்கம் வரும்… இப்போது நடந்த கொள்ளைகளுக்கு அந்த அரசாங்கத்தில் நீதி நிலைநாட்டப்படும் ; பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு
முன்னாள் எம்.பி பிரசன்ன ரணதுங்கவின் உரை
மத்திய வங்கியை கொள்ளையடித்ததாக கூச்சலிட்டவர்கள் இன்று 25 மில்லியன் டாலர் போன்ற ஒரு தொகையை ஹேக்கர்களை (Hackers) பயன்படுத்தி பெற்றுக்கொண்டதாக கூறுகிறார்கள். முன்னரென்றால் ராஜபக்ஷர்களை நோக்கி விரல் நீட்டினார்கள், அல்லது வேறு யாருடைய பெயரையாவது கூறி விரல் நீட்டினார்கள். இப்போது ஹேக்கர்கள் மீது விரல் நீட்டுகிறார்கள்.
எனவே, எதிர்காலத்தில் வேறொரு அரசாங்கத்தின் கீழ் இவை வெளிச்சத்திற்கு வரும். இப்போது இந்த நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் என்பது திருடனின் தாயிடம் (குறி) கேட்பது போன்ற ஒரு விடயமாகவே உள்ளது.
இதற்கு ஒரே குழுவினரே செயற்படுகிறார்கள். எனவே இந்தத் தகவல்களைச் சேகரித்துக் கொள்ள நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது மிக விரைவில் ஒரு அரசாங்கம் வரும், அந்த அரசாங்கம் வரும்போது இவற்றுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் எம்.பி பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.,



