News
JVP யின் ஆசை வார்த்தைகளுக்கு பேருவளை இளைஞர்கள் ஏமாறவில்லை
மக்கள் விடுதலை முன்னனி ஒரு கோடி வாக்குகள் எடுப்பதாக கூறி வருவது நகைச்சுவையான விடயம் என திலகரத்ன டில்ஷான் குறிப்பிட்டார்.
பேருவளையில் இடம்பெற்ற மக்கள் தேர்தல் பிரசார கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர்,
மக்கள் விடுதலை முன்னனி ஒரு கோடி வாக்குகள் எடுப்பதாக கூறி வருவது நகைச்சுவையான விடயம்.அத்தோடு அவர்கள் தமக்கு பாரிய ஆதரவு இருப்பதாக அலை ஒன்றை உருவாக்கு இளைஞார்களின் தலைகளை கழுவி உள்ளார்கள்.
ஆனால் JVP யின் ஆசை வார்த்தைகளுக்கு பேருவளை இளைஞர்கள் ஏமாறவில்லை என்பதை நான் மிக்க மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என திலகரத்ன டில்ஷான் குறிப்பிட்டார்.