News

ஜனாதிபதி அனுரவுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து ..

இலங்கையின் 9ஆவது நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள அனுரகுமார திஸாநாயக்கவுக்கு சீன ஜனாதிபதி ஸீ ஜிங்பின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்பு அண்டை நாடுகளாகும்.

இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட கடந்த 67 ஆண்டுகளில், இருதரப்பும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஆதரவையும் அளித்து, உலகின் நட்பு ரீதியான சகவாழ்வு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்குச் சிறந்த முன்மாதிரியாக உள்ளன.

சீன – இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்குச் சீனா அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

எங்களது பாரம்பரிய நட்பைக் கூட்டாக முன்னெடுத்துச் செல்வதற்கும், அரசியல் பரஸ்பர நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்கும், உயர்தர பெல்ட் எண்ட் ரோட் ஒத்துழைப்பில் அதிக பலனளிக்கும் விளைவுகளை அடைவதற்கும் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக, சீன ஜனாதிபதி ஸீ ஜிங்பின் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Back to top button