News
திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் (சஜித் அணியுடன்) இணைந்தே நாம் போட்டியிடுவோம் ; ரிஷாத் பதியுதீன்
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
கிண்ணியா விசன் மண்டபத்தில் (27)மாலை இடம் பெற்ற மாவட்ட மத்திய குழு கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்
அதேபோல அம்பாறை புத்தளம் மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என உயர் பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர் நாளை அம்பாறை மாவட்ட மத்திய குழுவை கூட்டி தீர்மானங்களை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
குறித்த மத்திய குழு கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப், உயர் பீட உறுப்பினர் டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.