News

பாடசாலைகளில் நிகழ்வுகளுக்கு பணம் அறவிடுவதற்கு தடை

பாடசாலைகளில் நடத்தப்படும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக் கூடாது என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

உலக சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் வசூலிப்பது தொடர்பாக அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சம்பவங்களினால் பெற்றோர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவதுடன் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இதன்காரணமாக பாடசாலைகளில் நிகழ்வுகளை நடாத்துவதற்கு பெற்றோரிடம் பணம் வசூலிக்க வேண்டாம் என வலியுறுத்திய அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, பாடசாலைகளில் அவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தாதவாறு அதிபர்கள் கவனம் செலுத்துமாறும் உரிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button