News
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது… இருந்தாலும் இலங்கையில் எரிவாயுவின் விலைகளை நாம் அதிகரிக்க போவதில்லை என லிட்ரோ அறிவிப்பு
அக்டோபர் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லையென லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை அதிகரிப்பதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சன்ன குணவர்தன இன்று அறிவித்தல் விடுத்துள்ளார்.
பங்கு செயற்பாடுகளை முறையாக நிர்வகிப்பதன் காரணமாகவே இவ்வாறான நிவாரணங்களை வழங்க முடியும் என லிட்ரோ நிறுவனமானது மேலும் தெரிவித்துள்ளது.