News

மேலும் 118 இலங்கையர்கள் தொழில் வாய்ப்பிற்காக இஸ்ரேல் செல்கின்றனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூற்றுப்படி, 2023 டிசம்பர் முதல் இஸ்ரேலில் விவசாய வேலைகளுக்காக 2,330 இலங்கையர்கள் சென்றுள்ளனர்.

விவசாயத் துறையில் வேலைகளுக்குத் தகுதி பெற்ற மேலும் 118 இலங்கையர்களுக்கும் விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 9, 10, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இக்குழு இஸ்ரேல் செல்கிறது. இஸ்ரேலில் நிலவும் அமைதியின்மை காரணமாக அங்கு பணிபுரியும் இலங்கையர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Recent Articles

Back to top button