News
அனுர குமார சொன்னது ஒன்று செய்வது வேறொன்று
ரனில் விக்ரமசிங்கவின் திட்டங்களை முன்னெடுத்து செல்வதால் அனுர குமார திஸாநாயக்கவிற்கு இன்னும் 5-6 மாதங்களுக்கு அரசாங்கத்தை பிரச்சினை இல்லாமல் ஓட்டிச்செல்ல முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா குறிப்பிட்டார்.
அனுர குமார சொன்னது ஒன்று செய்வது வேறொன்று என அவர் குறிப்பிட்டார்.
தங்களது கூட்டணியே தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றும் என அவர் மேலும் கூறினார்.