பார் லைசன்ஸ் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடாமல் இருப்பது ஏன் ?
மதுபானசாலைகளை நிறுவுவதற்கான அனுமதி அல்லது அனுமதிப்பத்திரம் சட்டவிரோதமான வியாபாரம் அல்ல எனக் கூறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்த நெறிமுறையற்ற ஒயின் கடைகளுக்கான பெயர் பட்டியலை வெளியிடவிடாமல் அரசாங்கம் தடுத்து நிறுத்தியமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
செப்டம்பர் 21 தேர்தலின் போது இது பரபரப்பான விஷயமாக இருந்தது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அண்மையில் வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் இடைநிறுத்துவதாகவும்,உரிமம் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவதாகவும் அவற்றை பரிந்துரைத்த அந்தந்த அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதாகவும் உறுதியளித்தனர்.
ஆனால் இப்போது NPP அரசாங்கம் பெயர் பட்டியலை வெளியிடுவதிலிருந்தும், இந்த ஒழுக்கக்கேடான ஒயின் ஸ்டோர்கள்/பார்களின் செயல்பாடுகளை இடைநிறுத்துவதற்கும் என்ன தடையாக இருக்கிறது? என மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.