கியூபாவிற்கு நாம் என்றும் துணை நிற்போம் ..
உலகின் மிகச்சிறிய அமைச்சரவை என்ற கிண்ணஸ் உலக சாதனையை தாம் படைத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உடனடியாக குறைக்குமாறு மக்கள் எம்மிடம் கோரவில்லை, வேலை வாய்ப்பு தருமாறு கோரவில்லை,மாறாக அரசியல் கலாசாரத்தை மாற்றி ஊழல்வாதிகளை பிடிக்குமாறே கோரினர்.மேலும் மக்களின் ஒத்துழைப்பின்றி இந்த அரசை எம்மால் நீண்ட தூரம் கொண்டு செல்லமுடியாது என கூறினார்.
கியூபா மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது.எரிபொருள் தட்டுப்பாடு உள்ளது. இங்கு போன்று அங்கு சொகுசு வாகனங்கள் அங்கு இல்லை.அங்கு மக்கள் பயணம் செய்வதில் கஷ்டங்கள் உள்ளன.அங்கு சில நேரங்களில் பாண் வாங்க,இறைச்சி வாங்க மக்கள் வரிசையில் நிற்கவேண்டி ஏற்படுகிறது.ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக அங்கு வரிசையில் நிற்கிறார்கள்.வரிசையில் ஆர்பாட்டம் தொடங்குவதில்லை.இந்த வாழ்க்கையை கிடைத்தமைக்கு தியாகம் செய்த மக்களே காரணம் என்பதை கியூப மக்கள் தெரிந்து வைத்துள்ளார்கள்.
அங்கு ஏற்பட்டுள்ள நிலமைக்கு காரணம் அந்தநாட்டு அரசோ அல்லது கொமியூனிஸ்ட் கட்சியோ அல்ல பேரினவாத அரசு என்பதை அந்த மக்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.
அவர்களுக்கு கிடைத்துள்ள அந்த சுதந்திரத்தை அவர்கள் கஷ்டத்திலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்கிறார்கள். எமக்கும் அது ஒரு முன்னுதாரணம் என கூறுகிறேன்.எமக்கும் கஷ்டங்கள் இன்னல்கள் ஏற்படும் அதை தாண்டி நாம் செல்லவேண்டும் என அவர் கூறினார்.
மக்களின் ஒத்துழைப்பின்றி எம்போன்ற ஒரு அரசுக்கு முன்னோக்கி செல்ல முடியாது எனவே மக்களின் ஒத்துழைப்பு எமக்கு மிக அவசியம்.
கியூபா மக்களுக்கும்,அந்த நாட்டு அரசுக்கும்,கியூபா கொம்யூனிஸ்ட் கட்சிக்கும் நாம் நமது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறோம்.கியூபாவிற்காக நாம் என்றும் நிற்போம். கியூபா இலங்கை நல்லுறவை வளர்த்து நாம் நல்ல ஒரு உலகத்தை உருவாக்குவோம் என அவர் குறிப்பிட்டார்.