News

ஜனாதிபதித் தேர்தலைத் தடுக்க கோரி, மனு தாக்கல் செய்தவருக்கு வழக்கு செலவு கட்டணமாக 5 இலட்சம் ரூபா செலுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜனாதிபதித் தேர்தலைத் தடுக்க கோரி, சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுன தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில், குறித்த மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டது.

மனுதாரர் தமது மனுவில், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் பொதுசன வாக்கெடுப்பின் மூலம் முறையாக அங்கீகரிக்கப்படும் வரை ஜனாதிபதித் தேர்தலைத் தடுக்கக் கோரியிருந்தார்.

எவ்வாறாயினும் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்ததாக நீதிமன்றத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், வழக்கு செலவு கட்டணமாக 5 இலட்சம் ரூபாவை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button