ஒரு முறையான வேலைத்திட்டமே நாட்டிற்கு தேவை. ஊடகக் கண்காட்சிகள் அல்ல
ஆட்சிக்கு வந்தால் திருடர்களைப் பிடிப்போம், வரியைக் குறைப்போம் என்று தேசிய மக்கள் சக்தி கூறியது. அவர்களின் ஆட்சியை இப்போது எப்படிப் பார்க்கிறீர்கள்?
இலங்கை வரலாற்றில் ஒரு வலுவான எதிர்க்கட்சி தேவைப்படும் தருணம் இதுவாகும்’ என்று மவ்பிம மக்கள் கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
அவர் தேசிய நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் ரொஷான் ரணசிங்க இவ்வாறு தெரவித்தார்.
ஆட்சிக்கு வந்தால் உழைக்கும் போதே அறவிடும் வரியை குறைப்போம் என்றார்கள். வற் வரி குறைக்கப்படும், 200 ரூபாவுக்கு எண்ணெய் தரலாம் என்றார்கள். IMF திருத்தம் குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருவதாக அவர்கள் கூறினார்கள். ஆனால் IMF பல பெரிய ஆவணங்களைக் கொண்டு வந்தாலும், ஜனாதிபதியின் பிரதிநிதியாக இருக்கும் அதிகாரிகள் ஒரு ஆவணத்தைக் கூட கொண்டுவரவில்லை. மேடையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? ஒரு முறையான வேலைத்திட்டமே தேவை. ஊடகக் கண்காட்சிகள் அல்ல என குறிப்பிட்டார்.