News

வீதி அபிவிருத்தி திட்டங்களை நெறிப்படுத்துதல் மற்றும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவது கிராமிய பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைய உதவும்

வீதி அபிவிருத்தி திட்டங்களை நெறிப்படுத்துதல் மற்றும் வினைத்திறன் மிக்கதாக மாற்றுவது கிராமிய பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைய உதவும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கொள்வனவு செயற்பாடுகள் நெறிப்படுத்தப்பட வேண்டுமெனவும், ஒப்பந்தங்களை ஒரு சிலரின் கைகளில் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக உள்ளுர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் வகையில் திட்டங்களைத் திட்டமிடுவதின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். .

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button