News
ஹிஸ்புல்லா போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹிஸ்புல்லா போராளிகள் தனது தனிப்பட்ட வீட்டை தாக்கி தன்னையும் மனைவியையும் கொலை செய்ய முயற்சித்தமை பாரிய தவறு என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹிஸ்புல்லா போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலின் சிசேரியா மாகாணத்தில் உள்ள அவரது வீட்டை தாக்குவதற்காக ஹிஸ்புல்லாஹ் போராளிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானங்களை அனுப்பியதால் பிரதமர் இதனை வலியுறுத்தினார்.
ஈரானால் ஆதரிக்கப்படும் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் தனக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அல்லது இஸ்ரேல் மக்களுக்கும் தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் பிரதமர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
எக்ஸ்