News
வவுனியா குடிவரவு-குடியகல்வு திணைக்களத்திலும் வரிசை-இரவு பகலாக காத்திருக்கும் மக்கள்
வவுனியா ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு-குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் மக்கள் கடவுச்சீட்டுகளை பெற வரிசைகளில் நிற்கவேண்டிய நிலை நீடித்து வருகின்றது
வெறுமனே 25 – 20 நபர்களுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுக்காக நாள் ஒன்றுக்கு சுமார் 700 தொடக்கம் 1000 பேர் வரையில் இரவு பகலாக வரிசைகளில் நிற்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகின்றது
அரசாங்கம் அண்மையில் கடவுச்சீட்டுக்களை பெறுவதில் உள்ள தாமதங்கள் நீக்கப்படும் என அறிவித்திருந்த போதிலும் இதுவரை எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
கொழும்பிலும் இந்நிலைமை தொடர்ந்தவண்ணம் உள்ளது.