News

இலங்கையின் ஏற்றுமதி செயற்திறன் வீழ்ச்சி!

கடந்த செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி செயற்பாடுகள் 937.95 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளன.

இலங்கை சுங்கம் விடுத்துள்ள தற்காலிக தரவுகளுக்கு அமைய 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் ஏற்றுமதி வருவாய் 3.49 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

தேயிலை, இறப்பர் உள்ளிட்டவை சார்ந்த உற்பத்திகள், மின்சார மற்றும் இலத்திரனியல் உற்பத்திகள் மற்றும் கடல் உணவு என்பவற்றின் ஏற்றுமதி வீழ்ச்சியே இதற்குப் பிரதான காரணமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Back to top button