News
கண்டி மாவட்டத்தில் 10 ஆசனங்களை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளோம் ; லால் காந்த
ஜனாதிபதி தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கே டி லால்காந்த குறிப்பிட்டார்.
கலஹா நகரில் இடம்பெற்ற கட்சி காரியாளய திறப்பின் போது கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதி தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.கண்டி மாவட்டத்தில் நாம் அமோக வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
கண்டி மாவட்டத்தில் 10 ஆசனங்களை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளோம்.எமது கட்சியில் விருப்பு வாக்கு சண்டையில்லை என அவர் குறிப்பிட்டார்.