NPP அணியில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே வாக்களித்து விட முடியுமா?

தற்போது NPP யானது பாராளுமன்ற தேர்தலில் 2/3 தனிப்பெரும்பாண்மையை கோருகிறது. ஆனால் கடந்த காலங்களில் ஜனாதிபதி அநுரகுமார அவர்கள் எந்தவொரு அரசாங்கத்திற்கும் 2/3 பெரும்பான்மையினை வாக்காளர்கள் கொடுத்து விடக்கூடாது; அது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக கூறி வந்தார். அதேபோன்று பலமான எதிர்கட்சி ஒன்று தற்ப்போது நாட்டில் தேவையில்லை போன்ற தனது கருத்துக்கள் மூலம் ஜனநாயகப் பண்புகளை அழித்துவிட்டு 2/3 பெரும்பாண்மையை தற்போது கோருவது எவ்வளவு பொருத்தமானது? என்பதையும் வாக்களிக்கும் நேரத்தில் நாம் மறந்து விடக்கூடாது.
அதேநேரம் NPP யானது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் என்று பல விடயங்களில் இரட்டை நிலைப்பாடுகளை அல்லது முன்வைத்த வாக்குறுதிகளை மீறத் தொடங்கியிருக்கிறார்கள். (உதாரணமாக 13 வது திருத்தம், பயங்கரவாத தடைச்சட்டம், கடன் மறுசீரமைப்பு)
இந்நிலையில் இவைகளை பொருட்படுத்தாது கண்மூடித்தனமாக மாற்றம் என்கின்ற அலையில் அள்ளுண்டு NPPக்கு வாக்களிப்பது பற்றியும் மிகவும் பொறுப்போடு சிந்தித்து நடந்து கொள்ள வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் நாம் வழங்கிய வாக்குகளும் தற்போது பாராளுமன்றத் தேர்தலில் நாம் அளிக்கவுள்ள வாக்குகளும் இரண்டு வேவ்வேறான பெறுமானங்களை சமூக, பிரதேச அரசியலில் தாக்கம் வழங்கக்கூடியது. இதனாலேயே ஜனாதிபதி அநுரகுமார அவர்கள்கூட பாராளுமன்ற பொதுத்தே்தலில் உங்கள் பிரதேசத்திலுள்ள உங்களுக்கு விசுவாசமான நல்லவர்களுக்கு,பொருத்தமானவர்களுக்கு வாக்களியுங்கள் என்று தெளிவாக தெரிவித்தும் இருந்தார்.
உதாரணமாக, கொழும்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் NPP வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள DR.ரிஸ்வி சாலி அவர்களைவிட SJB வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் பல வகைகளிலும் பல மடங்கு பொருத்தமானவர்.
ஏனென்றால் சமூக அரசியல் களத்தில் முஜிபர் ரஹ்மான் அவர்களின் பங்களிப்பும்,பங்குபற்றலும் அதிகம். மக்களுக்காக பல வருடமாக களத்தில் நின்று போராடி வருகின்றவர் அவர். ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் தொடர்பான விடயங்களில் உயிரைக் கொடுத்து குரல் கொடுத்தவர் என்று அவர்சார்ந்த பார்வை எமக்கு இருக்கிறது.
எனவே, NPP அணியில் களமிறங்கி உள்ளார்கள் என்ற காரணத்தினை மட்டும் கருத்தில் கொள்ளாது,
NPP வேட்பாளர்கள் கொள்கைக்கானவர்களா? பதவிக்கானவர்களா? என்ற வினாக்களுக்கு விடை காணுவதும் வாக்களிப்பதற்கு முன்னால் நமது கடமையாகும்.
அந்தவகையில்,
1. தற்போதய NPP வேட்பாளர்களில் பலர் NPP யின் உருவாக்கத்தில் பங்களித்திருந்தார்களா? அதன் கொள்கைக்காக அதனோடு அனைத்து பாடுபட்டார்களா?
2. அல்லது NPP பல தியாங்களை செய்து வெல்லும் வரை அவ்வாறனவர்கள் பதுங்கியிருந்தார்களா? NPP கடந்த தேர்தலில் வெற்றி அடைந்திருக்காவிட்டால் இவர்கள் இப்போது எங்கு இருந்திருப்பார்கள்?
3. NPPயில் பதவி வாய்ப்புக்காக மட்டுமே இவர்கள் சேர்ந்து கொண்டவர்கள் என்றால் அவர்களுக்கு வாக்களிப்பது எவ்வகையில் கொள்கைக்கான , மாற்றத்திற்கான வாக்குகளாக அமையும்?
4. இது போன்றவர்களுக்கு வாக்களிப்பது உண்மையிலேயே நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலாக அமையாதா?
5. இவர்களை விடவும் சிறந்தவர்கள் ஏனைய கட்சிகளில் போட்டியிட்டால் ஏன் நாம் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது?
6. NPP யின் கொள்கை நிலைப்பாடுகளிலும் உறுதிமொழிகளிலும் பல தெளிவான பிறழ்வுகள், சந்தேகங்கள் பரவலாக ஏற்பட்டு வரும் இந்த சூழலில், NPP என்ற ஒரே காரணத்திற்காக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளர்களுக்கு எந்த நிலைப்பாட்டில் வாக்களிப்பது?
மேலே உள்ள மிக யதார்த்தமான கேள்விகளுக்கு மத்தியில், பொருத்தமான ஏனைய கட்சியிலுள்ளவர்களுக்கு வாக்களிப்பதுவும் கூட பொருத்தமானது மட்டுமின்றி சமூக பொறுப்புள்ள முடிவாகவும் அமையும் என்ற நிலை சமூகமட்டத்தில் வலுப்பெற்றுள்ளது.
MLM.சுஹைல்

