News

NPP கூறியது போல வரிகளை நீக்கினால் 170 ரூபாவிற்கு பெட்ரோலை வழங்க முடியும்..

பெற்றோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்கினால் ஒவ்வொரு லீற்றரையும் 170-190 ரூபாவிற்கு சந்தையில் விற்பனை செய்ய முடியும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் திரு. டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் கட்சியின் எதிர்கட்சியாக இருந்த போது தேர்தல் மேடைகளில் கூறியது போன்று எரிபொருள் வரியை நீக்கி மக்களுக்கு வரியின்றி எரிபொருளை வழங்குவதற்காக காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

எரிபொருள் வரியை நீக்குவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை எனவும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அதனை ஒரே வர்த்தமானி மூலம் செய்ய முடியும் எனவும் அவர் கூறுகிறார்.

மின்சாரக் கட்டணமும் முப்பது வீதத்தால் குறைக்கப்படும் என தேர்தல் மேடைகளில் அப்போது கூறப்பட்டதாகவும், ஆனால் தற்போது ஐந்து வீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி அவர்கள் மக்களை முற்றாக ஏமாற்றிவிட்டனர் என ஹிரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Recent Articles

Back to top button