News

இன்னும் 10 வருடங்களில் அனைவருக்கும் சொந்த வாகனம் வாங்கக்கூடிய பொருளாதரம்..

வெளிநாடுகளில் ஒரு மாத வருமானத்தில் வாகனம் வாங்க முடியும் என தேசிய மக்கள் சக்தி காலி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் குழுவின் தலைவர் திரு.நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

நம் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை சேகரித்தாலும், ஒரு டிராக்டரின் ஒரு சக்கரத்தை மட்டுமே வாங்க முடியும் என்கிறார்.

ஜப்பானிய Vitz ரக காரை 12 இலட்சம் ரூபாவிற்கு இலங்கைக்கு கொண்டு வர முடியும் எனவும் அதனை கொண்டு வந்தால் அனைவரும் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

ஆனால் அந்த வாகனங்களுக்கு அரசாங்கம் 700,000 ரூபா வரி அறவிடுவதாகவும் அவர் கூறுகிறார்.

தேசிய மக்கள் சக்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இலங்கையில் உள்ள அனைத்து வீடுகளும் பத்து வருடங்களுக்குள் கார் வைத்திருக்கும் பொருளாதாரத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கட்டியெழுப்புவதாக தெரிவித்தார்.

Recent Articles

Back to top button