ALL BLACKS விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குளிர் கால விளையாட்டு போட்டிகள்
ALL BLACKS விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் குளிர் கால விளையாட்டு போட்டிகள் இன்று பிரான்ஸ் la courneuve வில் மிக விமர்சியாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இளம் சந்ததியின் வினைத்திறன், செயற்திறன்,சகோதரத்துவத்தை கட்டியெழுப்பவும், திறமைகளை இனம் கண்டு ஊக்குவிக்கும் முகமாக வயதுகள் அடிப்படையில் இலங்கையின் கலாசார, பாரம்பரிய விளையாட்டுகளான கரண்டியில் தேசிக்காய் வைத்து நடத்தல்,சங்கீத கதிரை, கலர் கண்டறிதல், யானைக்கு கண் வைத்தல்,கயிறு இழுத்தல்,இலக்கு பார்த்து சுடுதல், பலூன் ஊதி உடைத்தல், அது போன்று kick to kick ,உதைப்பந்தாட்டம் wicket to wicket பந்து எரிதல், basket throw கூடை பந்து, Roller round சில்லு சப்பாத்து,போன்ற போட்டிகள் நடை பெற்றது. (நேரம் போதாமை காரணமாக Batminton போட்டி நடைபெற வில்லை) எனினும் எதிர்பார்ப்பை விட இறைவனின் உதவியும், பெற்றோர்களின், சிறுவர்களின் ஒத்துழைப்புடன் இனிதே நிகழ்வுகள் நிறைவு பெற்றது அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டார்கள்.
சிற்றுண்டி மற்றும் இரவு போசனமும் வழங்கப்பட்டது இளம் சிட்டுக்களின் மகிழ்ச்சியும் ஆனந்தமும் எம்மை மனம் குளிரச் செய்தது. ( பூ பூக்கும் போது செடிக்கு தெரியாத அருமை செடியை வைத்தவனுக்கும் அதனை ரசிப்பவனுக்கும் தான் தெரியும்) என்பதை போல் அனைவரும் கொண்டாடி மகிழ்த்த தருணம் எமது நோக்கத்துக்கு கிடைத்த வெற்றியாக உணர்த்தோம் அல்ஹம்துலில்லாஹ் இனிவரும் காலங்களில் மிக பிரமாண்டமாக நிகழ்வுகளை நடத்தும் படி அனைவரும் வேண்டி இருந்தார்கள் இன்ஷாஅல்லாஹ்! ஆக உங்கள் ஆதரவு எமக்கு ஆரோக்கியம் பக்க பலம் இன்னும் ஒரு அழகிய தருணத்தில் ஒன்றாய் கைகோர்ப்போம். all blacks விளையாட்டு கழகம்அதன் வீரர்கள் சார்பாகவும், சமூகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள்.
தலைவர்
Razadi