இம் முறை காற்பந்து கண்டி மாவட்டத்தில் பெண்களின் பங்களிப்போடு வரலாற்று சாதனை படைக்கும்
நாங்கள் கடந்த காலங்களில் என்ன செய்துள்ளோம், எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பதை தெளிவு செய்தே மக்களிடம் வாக்கை கேட்கிறோம்.இம்முறை எங்களது வெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எமது வெற்றியில் பெண்களின் பங்களிப்பு அபரிதமாக உள்ளதை காண முடிவதாக.நடைபெற்ற கூட்டத்தில் அக்குறனையின் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் உரையாற்றி இருந்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்..
நாங்கள் எங்களது மக்களுக்கு, எங்களுக்கு கிடைத்த அரசியல் அதிகாரங்களுக்கும் அப்பால் சென்று பலதரப்பட்ட சேவைகளை செய்துள்ளோம். நாங்கள் செய்தவைகளையும் சொல்ல முடியும், இன்னும் செய்ய உள்ளத்தில் வரைந்து வைத்துள்ள திட்டங்களையும் தெளிவு செய்ய முடியும். சிலர் உங்களிடம் வந்து வெற்றுப் பேச்சுக்களை பேசி வாக்கு கேட்கலாம். நாங்கள் அப்படி வாக்கு கேட்பவர்கள் அல்ல. இதனையே மக்களும் விரும்புகின்றனர்.
இம் முறை எங்களைப் போன்ற புதியவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்பதில் மக்கள் மிக தெளிவாக உள்ளனர். நாளுக்கு நாள் எங்களது வெற்றி உறுதியாகி கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களின் பங்களிப்பு மிக சிறப்பாக உள்ளது. இம் முறை எமது வெற்றியில் பெண்கள் பங்களிப்பு அபரிதமானதாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. உங்களுக்கு தெரிந்த ஏனைய பெண்களையும் எமது வெற்றியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மாவட்டத்தில் எமது மக்களுக்கு பலதரப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. இப் பிரச்சினைகள் தொடர்பான தெளிவான பார்வை எங்களிடம் உண்டு என்பதை இவ்விடத்தில் பதிவு செய்து கொள்கிறேன். எங்களுக்கு பலமான அரசியல் அதிகாரங்கள் கிடைத்தால் இவற்றையெல்லாம் மிக இலகுவாக தீர்த்து தர முடியும். நாங்கள் பாராளுமன்றத்தில், நீங்கள் எதனையெல்லாம் பேச வேண்டும் என நினைக்கின்றீர்களோ, அந்த குரலாகவே இருப்போம் என்பதை இவ்விடத்தில் உறுதியாக கூறிக்கொள்கிறேன்.