News

மட்டக்களப்பு, பூநொச்சிமுனை வீட்டின் மீது வீசப்பட்டது புதுவகை குண்டா? பல கோணங்களில் விசாரணை

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் வீடொன்றில் மீது திங்கட்கிழமை(16) இரவு ) இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அங்கு பாவிக்கப்பட்ட குண்டு, தயாரிக்கப்பட்ட குண்டாகும். அது எவ்வகையைச் சேர்ந்தது என தெரியாது. இது புதுவகையானதாகும். பரீட்சித்து பார்ப்பதற்காக என பல கோணங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூநொச்சிமுனை முகைதீன் ஜூம்ஆஹ பள்ளி வீதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது திங்கட்கிழமை (15) இரவு 8.30 மணிக்கு பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்து, தீ பிழம்பு வெளியேறியது.

இதனையடுத்து, வீட்டின் அறைப் பகுதியிலுள்ள இரு ஓடுகள் உடைந்து கீழே வீழ்ந்துள்ளன. ஆனால், வீட்டிலிருந்த எவருக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், குண்டு வெடிப்பினால் கிளம்பிய புகை மனத்தினால் பெண்ணொருவர் வாந்தி எடுத்துள்ளார். அதனையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையின் விசாரணைகளை மேற்கொண்டனர். இருந்தபோதும் குண்டு தாக்குதலுக்கான எவ்விதமான தடயங்களும் இல்லாத நிலையில் இது குண்டுதாக்குதாலா? என கண்டறிய முடியாது குழப்பமடைந்தனர்.இந்நிலையில், தடயவியல் பிரிவு பொலிஸார் செவ்வாய்க்கிழமை (16) வரவழைக்கப்பட்டர்.அவர்கள் மேற்கொண்ட சோதனை அடிப்படையின் குறித்த வீட்டின் பின்பகுதியிலுள்ள அறை பகுதியைக் கொண்ட கூரை மீது இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த குண்டில் இருந்து வெளிவந்த சிறிய ரக சன்னங்கள், தகரங்களைத் துளைத்துக் கொண்டு போயுள்ளதைக் கண்டு பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து வெடித்த குண்டில் இருந்து வெளியேறிய சிறிய ரக சன்னங்களைக் கண்டுபிடித்து மீட்டதுடன் குண்டை யாரே வீட்டின் பின்பகுதி வீதி, வழியாகச் சென்று வீட்டின் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.அத்துடன், இது தயாரிக்கப்பட்ட குண்டாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்த வகையான குண்டை முதன்முதலாகப் பார்ப்பதாகவும் இது புது வகையான தயாரிப்பாக இருக்கலாம் எனவும் இது எவ்வாறான தயாரிப்பு என கண்டறியப்படவில்லை என்று, தயாரிக்கப்பட்ட குண்டை பரீட்சித்துப் பார்ப்பதற்காகவா? வீசப்பட்டுள்ளது, யார் செய்தனர்? ஏன்? எதற்காக? என்பதுபோன்ற பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker