நாடாளுமன்ற உறுப்பினரானால் எனக்கு வாகனம் ஒன்று தேவைப்படும்..
நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர் தனக்கு வாகனம் தேவைப்படும் என தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் ஜகத் மனுவர்ண தெரிவித்துள்ளார்.
சிரச தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தல் பிரசாரத்துக்கு வாகனத்தை பயன்படுத்தி வருவதாக கூறிய அவர்,
ஒரு நடிகராக தான் பேருந்தில் தீரீவீலரில் சென்று வேலை செய்வதாக கூறிய அவர் , ஆனால் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் அதனை செய்ய முடியாது அவசரமாக சென்று பக்கள் பணி செய்ய வாகனம் ஒன்று தேவைப்படும் என சுட்டிக்காட்டி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் தான் வீடு கட்டி வாகனம் வாங்கி ஸ்திரத்தன்மை அடையவில்லை என்றும் குறிப்பிட்ட அவர் .சேவை செய்யவே அரசியலுக்கு வருவதாகவும், ஆனால் மக்கள் பணி செய்ய சில வசதிகள் தேவைப்படுவதாகவும் கூறிய அவர், வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது ஒவ்வொருவருக்கும் தொடர்புடையது என்றும், அரசியலிலும், கலையிலும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.