அவதூறான வீடியோ பதிவு தொடர்பில் NPP வேட்பாளர் (காத்தான்குடி) பிர்தௌஸ் நளீமி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு!
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமிக்கு எதிராகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய தொடர்பிலும் காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட வீடியோ பதிவு தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாட்டை எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நேற்று (12.11.2024) செவ்வாய்க்கிழமை இரவு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வீடியோவை தயாரித்தவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியவர்கள் அதனை பகிர்ந்தவர்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாட்டினைத் தொடர்ந்து காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேநேரம், எம்.பீ.எம். பிர்தெளஸ் தனது சட்டத்தரணிகள் ஊடாக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.