ஏன் முஸ்லீம் ஒருவரை அமைச்சராக்க வேண்டும்?
“முஸ்லீம் அமைச்சரை அமைச்சரவைக்குள் உள்வாங்கி இனவாதத்தை துடைத்தெறிய வேண்டும்.”
ஆட்சி செயற்பாட்டுகளில் ஒருசாரார் புறக்கணிக்கப்படுவது கூட திட்டமிட்ட இனவாதமாகும். இனவாத சாயம் பூசப்படுகின்றது என்பதற்காக முஸ்லீம் அமைச்சர் ஒருவரை கோரமுடியாதா?
NPP க்கு பாராளுமன்ற தேர்தலிலும், ஜனாதிபதித் தேர்தலில் அநுரவுக்கும் வாக்களித்தவர்களில் மிகப் பெரும்பாலானோர் JVP கொள்கையை ஆதரித்தோ அல்லது NPP கொள்கைகளை ஆதரித்தோ அல்ல மாறாக அநுரவின் வாக்குறுதிகளை நம்பியும், புதிய ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்து லஞ்சம்,ஊழல், மோசடி போன்ற அனைத்தையும் இல்லாமல் செய்வதற்குமாகும்.
ஏனெனில் jvp யின் கடந்தகால அரசியலில் அதிகமான காலம் மக்கள் செல்வாக்கைப் பெற்றதாக இருக்கவில்லை இதற்கு காரணம் கருத்தியல் ரீதியிலான கொள்கையும், அவர்கள் சில சமயங்களில் பின்பற்றியிருந்த வன்முறை கலாசாரமுமாகும்.
ஆனாலும் தற்போது jvp ஜனநாயகத்திற்குள் நுழைந்தாலும் நடைமுறைச் சாத்தியமற்ற தூய சோசலிஷத்தை பின்பற்ற முயலுவதாலயே இவ்வாறான பிரச்சினைகள் வருகின்றன. சோசலிஷத்தின் ஒரு கட்சிமுறை போக்கு, புரட்சி, அரசற்ற நிலை போன்ற பல தோல்வியடைந்த கற்பனாவாதத்தை நடைமுறைப்படுத்துவது நவீன அரசியலில் முடியாத காரியம்.
ஏன் அமைச்சரவை அந்தஸ்த்து அவசியமாகின்றது?
*நாட்டின் சட்ட உருவாக்க செயற்பாடுகளில் அமைச்சரவை தீர்மானங்களும் பங்களிப்புச் செய்யும்.
* நாட்டின் உயரிய தீர்மானங்கள் அமைச்சரவையில் எடுக்கப்படுகின்றன.
* ஒரு பிரதி அமைச்சரால் அவர் பதில் அமைச்சராக செயற்படும் காலத்திலேயே அமைச்சரவை கூட்டங்களில் கலந்துகொள்ளலாம்.
இதனால் ஏன் முஸ்லீம் ஒருவரை அமைச்சராக்க வேண்டும்?
*NPP கொண்டுள்ள இஸ்லாமியசட்டங்கள் தொடர்பான விரோத போக்கு கடந்தகாலங்களில் இனங்கானப்பட்டுள்ளன. அவ்வாறானவர்களும் அமைச்சரவையில் இருப்பதால் அவ்வாறான சட்ட உருவாக்கங்கள் தொடர்பான விடயங்கள் வருகின்ற போது அவற்றை அமைச்சரவையில் விவாதிக்க வேண்டிய நிலை ஏற்படும். (,உதாரணமாக, மகளிர்,சிறுவர் விவகார அமைச்சர் போல்ராஜ் MMD தொடர்பானவைகள்)
*அதிகமான சிறுபாண்மையினராக முஸ்லீம்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் NPP அளிக்கப்பட்ட அதிகமான முஸ்லீம்களின் வாக்குகளினால் சகோதர இனத்தைச் சே்ந்த சிங்களவர்கள், தமிழர்களே தெரிவுசெய்யப்பட்டிருந்தனர் இது முஸ்லீம்களின் பிரதிநிதித்துவத்தை திட்டமிட்டு குறைக்கின்ற செயற்பாடா? என்ற சந்தேகமும் சமூகத்தில் மேலோங்கியிருக்கிறது.
*இலங்கையின் அரசியலில் பிரதிநிதித்துவக் கால ஆரம்பத்திலிருந்து “இன விகிதம்” “சிறுபாண்மைக் காப்பீடுகள்” என்ற விடயம் பின்பற்ற வந்துள்ளன என்பதானது இலங்கையின் அரசியல் சூழலை மைப்படுத்தியதாகும்.
* இலங்கையின் விகிதாசார அடிப்படையில் இன விகிதம் கருத்திற்கொள்ளப்பட்டு முஸ்லீம் அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும்.
“ஆகவே இனவாதம் இல்லை என்று தெளிவான இனவாதத்தை நடைமுறைப்படுத்துவது மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்து போலாகும்”
MLM.சுஹைல்