News
எனக்கு பயம் கிடையாது ! ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை கண்டு பிடிப்பது அரசாங்கத்தின் வேலை !
அஸாத் மௌலானா ஐரோப்பாவில் குடியுரிமை பெறவும் தன்னை அரசியல் ரீதியாக பழிதீர்க்கவும் டயஸ்போராவுடன் இணைந்து சொன்ன பொய்களை சி ஐ டி ஆதரவளிப்பது வருத்தமளிப்பதாக முன்னாள் அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறிய அவர் சஹ்ரான் குழுவோடு இணைந்து ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்டதாக கூறும் அசாத் மௌலானாவை நாட்டிற்க்கு அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.