அவ்வாறெனில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் கூறுவது பெளத்த தேசியவாதமா?
“அவ்வாறெனில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் கூறுவது பெளத்த தேசியவாதமா?”
இன ரீதியான அமைச்சர் நியமனம் மக்கள் ஆணைக்கு முரணானது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் அமைச்சரவையில் முஸ்லீம் அமைச்சர் நியமனம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு தனது கருத்தாக கூறியிருந்தார். அவ்வாறெனில் புதிய அமைச்சரவையில் புத்தசாசன அமைச்சு ஒன்று வழங்கப்பட்டுள்ளதே. இதனை எந்த இனவாதமாக நோக்கமுடியாதா?
இது மிகத் தெளிவான அநீதியான மனநிலையாகும் ஒரு தேசியமாக தேசியமக்கள் சக்தி பயணிக்கும் என்ற கூறிய விமல்ரத்நாயக்க அவர்கள் புத்தசாசன அமைச்சை மறந்துவிட்டாரா? அல்லது பெளத்த தேசியமாகத்தான் இந்த நாட்டவர்கள் பயணிக்க வேண்டும் என்று கூறு வருகின்றாரா? என்ற சந்தேகம் எமக்கு எண்ணத் தோன்றுகிறது.
புத்தசாசனத்திற்குப் பதிலாக மத நல்லிணக்க அமைச்சு அல்லது சமய விவகார அமைச்சு என்று பொதுவான அமைச்சு வழங்கப்பட்டிருந்தால் விமல் ரத்நாயக்க அவர்களின் கூற்றை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இவரின் கூற்று பெளத்த இனவாதத்தையே பிரதிபலிக்கின்றது என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.
இனவாதம் இருக்கக் கூடாது என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அப்பட்டமான இனவாதத்தை திணிப்பதானது, இனவாதத்திற்கூடாக ஆட்சிபீடமேறியவர்களைவிட மிகவும் மோசமானவர்களாகவே பார்க்கப்படுவார்கள் என்பதே யதார்த்தம்.
பல்லின இலங்கையில் பன்மைக் கலாசாரங்களுடன், சமய நம்பிக்கைகளுடன் பல்லின சமூகமாக வேறுபாட்டில் ஒற்றுமையாக புரிந்துணர்வுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் நாம் இலங்கையர்கள் என்ற உணர்வுகளுடன் ஒரேநாட்டவர்களாக அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் பங்குபற்றுவதுதான் அழகாக இருக்கும்.
இதிலும், பெளத்த தேசியவாத கருத்துக்களை தெளிவாகப் போசி ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களில் கூட இவ்வாறு முஸ்லீம்கள் திட்டமிட்டு புறக்கனிக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியவிடயமாகும்.
இது போன்ற இனவாத விடயங்கள் system change க்கூடாக நடைபெறலாம் என்பதற்காகத்தான் எந்தவித அரசாங்கத்திற்கும் 2/3 பெரும்பாண்மை சென்றுவிடக் கூடாது என்றும் அவ்வாறான அபரிவிதமான அதிகாரங்கள் ஆட்சியாளர்களை மனிதர்கள் என்ற அடிப்படையில் பிழையான நடைமுறைகளுக்குள் இட்டுச் செல்லும் என்பது இவ்வளவு விரைவாக அமுல்ப்படுத்தப்படும் என்று கூட நாம் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதுதான் கவலை
இவைகளுக்கு மத்தியில் NPP க்கு வெளியிலிருந்து வேறுகட்சிகளுக் கூடாக முஸ்லீம் அரசியல்வாதிகள் தெரிவு செய்யப்பட்டிருப்பதானது பாராளுமன்றத்திலாவது குரலாக இருக்கும் என்ற ஆருதலாவது இருக்கிறது.இவ்வாறான சந்தர்பத்தில் முஸ்லீம்கள் சார்பாக NPP க்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்களது கடந்தகால தவறுகளை, பிழைகளைத் திருத்தி இதயசுத்தியுடன் எமது சமூகத்திற்காக துணிவுடன் செயற்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.
MLM.சுஹைல்