News

ஈஸ்டர் தாக்குதலுக்கும் எமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

ஈஸ்டர் தாக்குதலுக்கும் எமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் என சிவனேசதுறை சந்திரகாந்தன் என அழைக்க்கப்படும் முன்னாள் அமைச்சர் பிள்ளையான் குறிப்பிட்டார்.

தான் ஒரு புத்தகத்தை எழுதி எப்படி இஸ்லாமிய பயங்கரவாதம் எப்படி காலூன்றியது, அதற்கான வாய்ப்புகள் எப்படி உருவானது,நல்லாட்சி அரசு விட்ட தவறுகள் என்ன ?கவனயீனமான அதிகாரிகள் இந்த நாட்டை குழி தோண்டி புதைத்தார்கள்.அந்த குண்டு வெடிப்பினால் தான் சுற்றுலாத்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டது.அதன் தாக்கம் தான் படிப்படியாக இந்த நட்டை மோசமான பொருளாதர நிலமைக்கு கொண்டு சென்றது என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

ஈஸ்டர் தாக்குதலுக்கும் எமக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை “மடியில் கனம் இல்லை வழியில் பயமில்லை” சாதாரண மக்களை நம்ப வைப்பதற்காக நான் விடுதலை போராட்டத்தில் இருந்தேன் என்பதற்காக இந்த விடயத்தில் இழுத்துவிட பார்க்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button