News

நாட்டின் நலனை கருதியே அதற்கு தேவையான அமைச்சு உருவாக்கப்பட்டு பொருத்தமானவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

புதிய அரசாங்கத்தில் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலனை கருதியே அதற்கு தேவையான அமைச்சு உருவாக்கப்பட்டு அதற்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்படுவார்கள், தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் வரம்பற்ற அதிகாரம் மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றிரவு ஒளிபரப்பான நெத் எப்எம் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு டில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Recent Articles

Back to top button