News
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பதற்றமான சூழல்..
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் குழுவொன்று கட்சிக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பான ஆவணமொன்றை கையளிப்பதற்காக, சிறிகொத்தவுக்கு வருகை தந்த போதே, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ரவி கருணாநாயக்க வெளியேறும் வேளையில், அங்கு வந்த சிலர், தேசியப் பட்டியல் மூலம் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற நியமனத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாகக் கூறி, தம்மைத் தாக்கியதாக, ஆவணத்தை கையளிக்க வந்தவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.