News
இந்திய ‘ரோ’ புலனாய்வு பிரிவு நடத்திய கருத்துக்கணிப்பிலும் சஜித் முன்னிலை ; அஷோக அபேசிங்க ..
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க குறிப்பிட்டார்.
இதன் காரணமாகவே ஜனாதிபதி தரப்பு தேர்தலை பிற்போட முயற்சிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போது நடத்தப்பட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் சஜித் முன்னிலையில் இருப்பதாக கூறிய அவர் இந்திய ‘ரோ’ புலனாய்வு பிரிவு நடத்திய கருத்துக்கணிப்பிலும் சஜித் முன்னிலையில் இருப்பதாக கூறினார்.