News
தொடர்ந்து பெய்து வரும் அடை மழையையும் கணக்கெடுக்காமல் வேகமாக சென்ற பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்து மேலும் சிலர் காயம் .
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மதவாச்சி பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் அடை மழையின் போது பேருந்து வேகமாக வந்ததால் சாலையை விட்டு விலகிக் கவிழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்தார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.