News
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகனம் வழங்குவது நடைமுறையில் இல்லாத ஒன்று !
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாகனம் வழங்குவது நடைமுறையில் இல்லாத ஒன்று என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம் நாத் சி தொலவத்த குறிப்பிட்டார்.
கடந்த பாரளுமன்ற காலப்பகுதியில் அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் மற்றும் சில அமைச்சுகளின் கண்காணிப்பு உறுப்பினர்களுக்கு மட்டுமே வாகனம் வழங்கப்பட்டதாக கூறிய அவர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்குவது நடைமுறையில் இல்லாத ஒன்று என கூறினார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை குறைப்பதாக கூறிய அரசு மேலதிக வாகனம் வழங்குவது மேலதிக வரப்பிரசாதம் இல்லையா என கேள்வி எழுப்பினார்.
அரச வாகனம் வழங்குவதானாலும் அந்த வாகனங்களுக்கான திருத்த செலவுகளையும் அரசு ஏற்க வேண்டியேற்படுவதால் மக்களில் பணம் விரயமாகும் என கூறினார்.