அன்று நான் தலையை அசைக்காமல் இருந்திருந்தால் துப்பாக்கிக் குண்டு எனது நெற்றியில் பாய்ந்திருக்கும் – கடவுள் என்னுடன் இருக்கிறார் ; டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் கடந்த 13ஆம் திகதி பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் 20வயது இளைஞனால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவரின் வலது காதில் காயத்துடன் உயிர் தப்பினார்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு பின் நேற்று நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, ”எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கொண்டிருந்தது, இருந்தபோதிலும் நான் மிகவும் பாதுகாப்பாகவே உணர்ந்தேன். கடவுள் என் பக்கம் இருக்கிறார். கடைசி நொடியில் நான் எனது தலையை அசைக்காமல் இருந்திருந்தால் துப்பாக்கிக் குண்டு எனது நெற்றியில் பாய்ந்திருக்கும். இன்று உங்கள் முன்னாள் நான் இருந்திருக்க மாட்டேன் ஆனால், கடவுளின் கருணையால் இங்கு உங்கள் முன் நிற்கிறேன்”என்று கூறியுள்ளார்.
மேலும், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாதுகாப்பு வீரருக்கும் அஞ்சலி செலுத்தினார்