News

மின்சார சபை 200 பில்லியன் ரூபா இலாபத்தில் இயங்குகிறது ! மின் கட்டணத்தை 35 % வீதத்தால் குறைக்கவும் ; தம்மிக சஞ்சீவ

நீர் தேங்கங்களில் போதிய அளவு நீர் இருப்பதால் தற்போது ஒரு அலகிற்காக மின் உற்பத்தி செலவு 2.50 ரூபாவிலிருந்து 4.50 ரூபாய் வரை குறைந்துள்ளதாக மின்பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக சஞ்சீவ குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபை மின் கட்டணத்தை 35% சதவீதத்தில் இருந்து 40 % வீதம் வரை குறைக்க வேண்டும் என கூறிய தம்மிக சஞ்சீவ சபை தற்போது 20, 000 கோடி ரூபாய் இலாபத்தில் இயங்குவதாக கூறினார்.

தேசிய மக்கள் சக்தி அரசு இலங்கை மின்சார சபை க்கு நியமித்துள்ள தலைவர் மற்றும் பிரதி தலைவர்கள் இருக்கும் வரை மின் கட்டணம் குறையாது. மின்சார சபை தலைவர் மற்றும் மின் சார சரை பிரதி தலைவருக்குன் மின்சார துறை கொந்தராத்து நிறுவனம் ஒன்று உள்ளது.இவர்கள் பிரசித்தி பெற்ற நிலக்கரி மாபியாவை சேர்ந்தவர்கள். இவர்களை உடனடியாக பதவி நீக்கவும் என மின்பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக சஞ்சீவ குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button